ஊரடங்கு உத்தரவின் போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானம்!
Tuesday, June 16th, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவிற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
முன்பதாக நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்றை கட்டப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் அவ்வுத்தரவை மீறி நடமாடிய ஆயிரக்கணக்கானோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை உருவாகும் - தேர்தல்கள் ஆணையாளர...
இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !
கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் - அரச மரு...
|
|
|


