ஊடகவியலாளர் தங்கவேல் சுமனுக்கு “இளம் கலைஞர்” விருது!
Tuesday, November 5th, 2024
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் “இளம் கலைஞர்” விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதி பகுதியில் திருகோணமலையில் குறித்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டுவருகின்றதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சொந்த இடமாக கொண்ட தங்கவேல் சுமன் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஊடகவியலாளராக தற்போது பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்!
இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தும் - சுற்றுச்சூழ...
எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் - இராணுவ ...
|
|
|


