உவர்நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவிக்க செயற்றிட்டம் – முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உவர் நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உவர் நிலங்களாகக் காணப்படும் பயிர்செய்கை நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதாவது எதிர்வரும் காலபோகத்தின்போது குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்;தி நிதியின் கீழ் 0.5 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு பயிற்சி!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!
கல்வி முறையை சீர்குலைப்பதற்கு யாருக்கும் இடமளியேன் - தேவைப்பட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தா...
|
|