உள் நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும் உள் நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் வரியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதி கரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை 15 ரூபாவிலிருந்து 50 ரூபா வரை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்குவில் பெற்றோல் குண்டு தாக்குதல்: 4 பேர் கைது!
தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஆசிய அபிவிருத்தி வங்கி!
கொரோனா அச்சுறுத்தல்: இதுவரை 619,467 உயிரிழப்பு!
|
|