உலகின் பெறுமதி மிக்க கோப்பி இனம் நுவரேலியாவில்!
Monday, March 13th, 2017
உலக சந்தையில் அதிக விலையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஏற்றுமதி பயிர்செய்கை இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இவ்வாறான பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் 15000 கோப்பி கன்றுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக விலைக்கு வழங்கப்படும் எரபிக்க எனப்படும் கோப்பியை கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்திலுள்ள நுவரெலியாவில் வளர்க்க முடியும். நுவரெலியா மாவட்டமே அதற்கு பொருத்தமான இடமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் அதனை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நாடு முழுவதும் கோப்பி பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு 30 இலட்சம் கோப்பி கன்றுகள் அவசியமாக உள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் தாக்கம் குறைவு!
கிளிநொச்சியில் வாழ்வாதாரத் திட்டத்திற்கு 300 பயனாளிகள் தெரிவு!
யாழ்ப்பாணத்துடனான சேவையை விஸ்தரிக்க ஆர்வம் காட்டும் சர்வதேச விமான நிலையங்கள்!
|
|
|


