உருளைக் கிழங்கு விலை அதிகரிப்பு  விவசாயிகள் மகிழ்ச்சி

Saturday, March 3rd, 2018

உருளைக்கிழங்கின்  விலை அதிகரிப்பு. உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வருமானம் 75 வீதத்தால் அதிகரித்துள்ளது.

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலையும் கிலோ ஒன்று முப்பது ரூபாய் அதிகரித்த விலையில் வெளி மாவட்ட சந்தைகளில் விற்பனையாகின்றது.

இறக்குமதி வரி அதிகரிப்புக்கு முந்திய நிலையில் தம்புள்ளை மத்திய சந்தை மற்றும் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் கிலோ ஒன்று 40 ௲ 45 ரூபாவிற்கு விற்பனையான யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு தற்போது கிலோ ஒன்று 70-75 ரூபா வரையும் விற்பனை மூலம் 75 வீதமான வருமான அதிகரிப்பு மேலும் பல விவசாயிகளை உருளைக்கிழங்கு  பயிர்ச் செய்கையில் ஆர்வம் கொள்ள வைத்துள்ளது என மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாஜத்தின் செயலாளர் தெரிவித்தார் .

Related posts:

உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை - தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியம...
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணிலினால் பரிந்துரை - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளில் பொதுநலவாய கூட்டத்தில் சார்ள்ஸ்!!