உரிமை கோரப்படாத பொருட்களை உறுதிப்படுத்திப் பெறக்கோரிக்கை!

யாழ்ப்பாணம் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டுள்ள கீழ் காண் சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த சான்றுப்பொருட்களை உரிமை கோருபவர்கள் எவரேனுமிருப்பின் 6 மாத காலப்பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து பெற்றுக்கொள்ள முடியுமென நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
சான்று பொருள் விபரம் வருமாறு, 28 எஸ்.1085 இலக்க இசுசு வர்க்க லொறி வாகனம், பதிவு செய்யப்படாத இலக்க மற்ற உழவு இயந்திரப் பெட்டிகள் ஆகியனவையை உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரவிராஜ் படுகொலை வழக்கு: அறுவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் - வெளியானது வர்த்தமானி !
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல்...
|
|