உயிரிழந்த மாணவியின் காதலனும் உயிரிழப்பு!
 Wednesday, July 27th, 2016
        
                    Wednesday, July 27th, 2016
            
கடந்த சனிக்கிழமை அம்பலாங்கொட மற்றும் பலப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் மோதி உயிரிழந்த மாணவியின் காதலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது உடல் பட்டபொல – கோபேதடுவ எனும் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை காலை 10.40 அளவில் ரயிலில் மோதி 16 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்தார். காலியில் இருந்து ரம்புக்கனை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே அவர் உயிரிழந்திருந்தார்.சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்தச் சிறுமி ரயில் கடவை அருகில் நடமாடும் காட்சி அருகில் இருந்த வீடு ஒன்றின் CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போது அது தொடர்பில் மாணவியின் சகோதரர் பின்வருமாறு தெரிவித்திருந்தார் –
தங்கையுடன் ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டேன். ரயிலில் வந்து கொண்டிருந்த நான் ரயிலில் இருந்து குதிப்பதற்கு முயன்றும் முடியவில்லை. பின்னர் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அவ்வேளையில், எனது தங்கையின் கழுத்தை அவர் பிடித்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார். தங்கையின் மீது தாக்குதல் மேற்கொண்டார். பின்னர் நான் ஓடிச் செல்லும் போது தங்கையைக் கழுத்தில் பிடித்து ரயிலில் தள்ளிவிட்டார். நான் அவரைப் பிடிக்க முற்பட்ட போது என்னைத் தள்ளிவிட்டு ஓடி விட்டார். தங்கை ரயிலில்மோதிவிட்டமையைக் கண்டு எனக்கு மயக்கம் ஏற்பட்டது
இந்த சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த மாணவியின் காதலன் என்று கூறப்படும் இளைஞர் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. அது குறித்து அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், தான் இதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யானவை என மாணவியின் சகோதரர் பின்னர் ஏற்றுக்கொணடிருந்தார்.
மாணவியும் இளைஞரும் இருந்த இடத்திற்குச் சென்ற மாணவியின் சகோதரன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தற்போது மேற்கொண்டுள்ள விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரன் இரண்டாவது முறை வாக்குமூலம் வழங்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் சடலம் அம்பலாங்கொடை கொகேன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது காதலர் என்று கூறப்படும் 17 வயதான இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அவரது வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளை பலப்பிட்டி பிரதம நீதவான் மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        