உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!
Friday, September 1st, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் (2022) முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு முடிவுகள் சில நாட்கள் தாமதமாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் தேதி முடிவடைந்த உயர்தரப் பரீட்சையின் (2022) விடைத்தாள்கள் மதிப்பீடு தாமதம் காரணமாக முடிவுகளை வெளியிட சுமார் 6 மாதங்கள் ஆனதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரிசி குறித்து விசேட அறிவிப்பு!
குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம்!
|
|
|


