உயரதிகாரியிடம் முறையீடு: படுகாயமடைந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியர்!

Wednesday, December 14th, 2016

உயர் அதிகாரியிடம் முறையிட்டதால் படுகாயமடைந்த இளைஞர் ஒருவருக்கு வவுனியா வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் சிகிச்சையளிக்க மறுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் குறித்த இளைஞனின் உறவினர்களுக்கும், குறித்த வைத்தியருக்கும் இடையில் நேற்று வைத்தியசாலையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் குழுவொன்றினால் வவுனியா, வைரவப்புளியங்குளத்தில் வைத்து வேப்பங்குளம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர்தாக்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக தனக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனக்கு சிகிச்சைஅளிக்கப்படவில்லையென உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்தபடியால் தனது காயங்களுக்குசிகிச்சையளிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இரண்டு நாட்களின்பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர் சார்பான நபரொருபவர் தொலைபேசி மூலம் வைத்தியருக்கு தகாத வார்த்தையால் பேசி அச்சுறுத்தியுள்ளார். இதனால் மருத்துவம் வழங்கமாட்டேன் எனவும், தொலைபேசியில் பேசியவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வைத்தியர் தெரிவித்ததே மருத்துவம் வழங்காது இளைஞனை வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தாம் அவ்வாறு பேசவில்லை எனவும் மேலதிகாரி சிகிச்சையளிக்கவில்லை எனவும் தெரிவித்தாகவும் பாதிக்கப்பட்ட  இளைஞனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

DSC06132-720x480

Related posts: