உதவித்தொகை பெறுபவர்கள் மீளாய்வுக்கான பதிவை மேற்கொள்ளவும்!
Monday, February 19th, 2018
தென்மராட்சிப் பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவால் பொதுசன மாதாந்த உதவித்தொகை மற்றும் முதியோர்களுக்கான உதவிக் கொடுப்பனவு (2000 ரூபா) பெறுபவர்களுக்கான மீளாய்வு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக கிராம அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.
இந்த உதவித்தொகையைப் பெறுவோர் பணம் பெறும் அத்தாட்சிப் பத்திரம், குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தருமாறு பிரதேச செயலர் தே.பாபு அறிவித்துள்ளார்.
மீளாய்வு தொடர்பான விவரங்களை தத்தமது கிராம அலுவலருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
திருகோணமலை இறக்ககண்டி வாழையூற்று மக்களுடன் ஈ.பி.டிபியினர் சந்திப்பு
மின்தடை!
எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
|
|
|


