உணவு விற்பனை நிலையங்களில் திடீர்ச் சோதனை!
Thursday, September 27th, 2018
பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரைப் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அங்கு வியாபார அனுமதிப் பத்திரம், சுகாதார மருத்துவச் சான்றிதழ், உரிய சுகாதார பாதுகாப்பு ஆகியவையின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ச – ஜனாத...
கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!
யாழ் போதனாவுக்கு 9 பார ஊர்திகளில் வருகின்றது மருந்துப் பொருள்கள் - பணிப்பாளர்!
|
|
|


