உணவக நிர்வாகிக்கு மீண்டும்  அதிகூடிய அபராதம்!

Wednesday, August 17th, 2016

சுகாதார சீர்கேட்டான முறையில் உணவகத்தை  இயங்கி வந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இரண்டாவது தடவையாக 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஏ.எம்.எம்.றியால் நேற்றுமுன்தினம் (15) தீர்ப்பளித்துள்ளார்.

ஊர்காவற்துறை புளியங்கூடல் பகுதியிலுள்ள ஒரு உணவகத்துக்குச் சென்ற சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்ஜீவன் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் உணவகம் இயங்கி வருவதை அவதானித்தமையை அடுத்து உணவக உரிமையாளருக்கு எதிராக கடந்த 11ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,  உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்து இவரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான், இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆறு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 7 ஆயிரம் ரூபா வீதம் 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

இதே வேளை கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி உணவகத்தில் காணப்பட்ட சுகாதார சீர்கேடு காரணமாக இவருக்கெதிராக சுகாதாரப் பரிசோதகரால் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டமையைத் தொடர்ந்து இவருக்கு நீதிவான் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: