உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை!
Monday, January 2nd, 2017
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்று தீக்கிரையான சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உடுத்துறை பகுதியிலுள்ள வேம்படி முத்தமிழ் சனசமூக நிலையமே தீயினால் முற்றாக எரிந்துள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாகவும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சனசமூக நிலையத்திலிருந்த சுமார் 100 புத்தகங்களும் தளபாடங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts:
5 விநாடிகள் முகக்கவசமின்றி இருப்பது ஆபத்து - மருத்துவர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் - நாடாளுமன்ற...
|
|
|


