ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரனின் மாமனாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Monday, March 21st, 2016
காலஞ்சென்ற அமரர் வல்லிபுரம் கந்தையாவின் (இளைப்பாறிய சுகாதார உத்தியோகத்தர்)பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்றையதினம் (20) காலமான அமரர்.வல்லிபுரம் கந்தையா அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று (21) அச்சுவேலி, இடைக்காட்டிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
காலஞ்சென்ற அமரர் வல்லிபுரம் கந்தையா ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி பிரதேச அமைப்பாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரனின் அன்பு மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மது போதையில் வாகனம் செலுத்திய இரு ஆசிரியர்கள் மானிப்பாயில் கைது !
உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 120 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்ப...
அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரிக்கு தட்டுப்பாடு கிடையாது - வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
|
|
|
கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...


