ஈரான் மீதான பொருளாதார தடை குறித்து இலங்கை மத்திய வங்கி பேச்சுவார்த்தை!
Monday, September 5th, 2016
ஈரான் மீதான பொருளாதார தடை குறித்து இலங்கை மத்திய வங்கி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
ஈரான் மீதான சில பொருளாதார தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். தற்போது ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்ட போதிலும், நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த தடை அமுலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகள் அமெரிக்காவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய மத்திய வங்கியின் ஊடாக ஈரானுடன் நிதிக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளக்கூடிய சாத்தியமுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
சில கட்சிகள் 50/50 கோருகின்றன - அமைச்சர் பைசர் முஸ்தபா!
பேஸ்புக் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் - அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசா...
|
|
|


