இவ்வாறு சுட்டால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது! – ஹிருணிகா பிரேமச்சந்திர!
Monday, September 12th, 2016
‘இவ்வாறு சுடப்பட்டால், ஒரு செக்கன் கூட அதன் பின்னர் உயிர்வாழ முடியாது. அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது’ என, என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, தலையில் துப்பாக்கிச்சூடுபட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை, தனது பேஸ்புக்கில் முதன்முறையாக பதிவேற்றி அதில், இந்தக் கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை வெளிப்படுத்துவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டுள்ள ஹிருணிகா, தனது தந்தையில் தலையில் குண்டு காயம் பட்டிருந்த போது அவர் எவ்வாறு இருந்தார் என்பதை, தனது பேஸ்புக்கில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக இதனை பதிவேற்றியதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் அது உண்மையான புகைப்படம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.
ஏனென்றால், எந்நேரமும் சிரித்துக்கொண்டே இருக்கும் அவரது முகம் தான் என் நினைவில் உள்ளது. என் வாழ்கையில் முதல் தடவையாக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன்.
இது உங்கள் இரக்கத்தைப் பெறுவதற்கு இல்லை. எனது தந்தையின் தலையில் எவ்வாறு துப்பாகியால் சுடப்பட்டிருந்தது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
|
|
|


