இளைஞன் வெட்டிக் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை – முல்லைத்தீவில் சம்பவம்!

Thursday, May 24th, 2018

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை  சேர்ந்த இளைஞனைக்  காணாத தந்தை பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் செல்வபுரம் ௲ கள்ளுத்தவறணை பகுதியில் உள்ளபனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில்,வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை மீட்டனர்.

இளைஞனின் தந்தை கிராம மக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கொண்டு தனது மகனின் சைக்கிள் என அடையாளம் காட்டிஉடலையும் அடையாளம் காட்டினார் .

கிளிநொச்சியிலிருந்து விரைந்த குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: