இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை!

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 21ஆம் திகதி பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூவில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்று வர்த்தகரை கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
SAITM இல் தேடுதல் வேட்டை!
கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி - அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!
|
|