இளம் யுவதி மரணம் – அதிர்ச்சியில் உறவினர்!

உணவு உண்பதை தவிர்த்து வந்த யுவதி ஒருவர் அவரது வீட்டு வளவில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஈவினை மத்தியை சேர்ந்த செல்வநாயகம் சுகாயினி (வயது 36) என்ற யுவதியே மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
குறித்த யுவதியின் தாய் தந்தை இறந்த பின்னர் சிறிய தாயுடன் வசித்து வந்துள்ளார். சிறியதாய் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இந்த யுவதி தனது தந்தையார் இறந்த பின்பு மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் உணவு உண்பதையும் குறைத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் வளவில் குறித்த யுவதி முகம் குப்பற விழுந்து கிடந்ததுடன் உடல் முழுவதும் எறும்பு ஈக்கள் மொய்த்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
பாடசாலையால் வந்த சிறியதாய் யுவதி நிலத்தில் கிடப்பதைக் கண்டதும் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யுவதியின் சடலம் மிகவும் மெலிவடைந்து பரிதாபமானதாகவும் காணப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இது தொடர்பான மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
Related posts:
|
|