இலவச தொழிற்பயிற்சி கற்கைநெறிகள்!

Friday, December 8th, 2017

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது யாழ்.மாவட்டத்தில் தற்கால வேலை வாய்ப்பினை மையமாகக் கொண்டு முழுநேர மற்றும் பகுதி நேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது.

யாழ்.மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், கைதடி, பண்டத்தரிப்பு, சுன்னாகம், பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கைநெறிகள் எதிர்வரும்; 2018 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவை மூன்று, ஆறு மற்றும் ஒரு வருடம் பயிற்சி காலங்களைக் கொண்டது. இக் கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை(NVQ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும். இக்கற்கை நெறிகளை முழுமையாகப் பூர்த்தி செய்து NVQ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் அனைவருக்குமான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இக் கற்கைநெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல.12 கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம். (021 222 7949) அல்லது அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் எதிரவரும் 15.12.2017 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

Related posts: