இலவச தொழிற்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்கால வேலைவாய்ப்பினை மையமாகக் கொண்டு முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை நடத்தி வருகின்றது. 2017ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இக்கற்கை நெறிகளாவன சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், உணவு மற்றும் குடிபானம் பரிமாறுபவர், காய்ச்சி இணைப்பவர், இரு சக்க மற்றும் முச்சக்கர திருத்துநர், அலுமினியப் பொருத்தனர், வீட்டு மின்னிணைப்பாளர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், ஆடை வடிவமைப்பாளர், கட்டட நிர்மாண உதவியாளர் ஆகும். இக்கற்கை நெறிகள் அனைத்தும் இலவசமாக கற்பிக்கப்படுவதொடு தேசிய தொழில் தகைமை (Nஏஞ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும்.
இக்கற்கை நெறிகளைக் கற்க விரும்புபவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம் 1ஆம் மாடி, வீரசிங்க மண்டபம், இல.12 கே.கே.கே.எஸ்.வீதி யாழ்ப்பாணம் அல்லது வலந்தலை சந்தியிலுள்ள காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|