இலங்கை ரூபா பாரியளவில் சரிவு!

Wednesday, October 26th, 2016

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் சரிவடைந்துள்ளதாகவும் இறக்குமதியாளர்களுக்கான டொலரின் கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த சரிவிற்கான காரணமாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் மதிப்பு 147.95 மற்றும் 148.05 இடையிலான அளவீட்டில் பதிவாகியுள்ளது.ரூபாவின் மதிப்பை உறுதிபடுத்துவதற்காக மத்திய வங்கி தலையீட்டொன்று மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆசிய நிதி சந்தையில் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. 9 மாதங்களுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகமான உயர்வு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இறக்குமதியாளர்களின் டொலர் தேவை மற்றும் ஏற்றுமதியாளர்களின் விற்பனை இல்லாமையின் காரணமாக இலங்கை ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 146.90 / 95 ரூபாவாக காணப்பட்டுள்ள போதிலும் வர்த்தகம் அரிதாகவே காணப்பட்டுள்ளன. இறக்குமாதியாளர்களின் டொலர் கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் முதலீடுகள் இல்லாமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணய வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு அரசு வங்கியில் டொலர்கள் விற்பனை செய்வதனை காணமுடிந்த போதிலும், அது மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள் அல்லது அதன் சொந்த நிலைகளில் விற்பனை செய்கின்றதா என்பது தொடர்பில் உறுதியாக தெரியவில்லை என அந்த நாணய வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

exchange_rate

Related posts:


இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டும் : சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் வி...
நீண்ட இடைவெளியின் பின்னர் நாளைமுதல் மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற பார்வையாளர் கூடம்!
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை - பெட்ரோலிய கூட்ட...