இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்யும் கொரியா!

Sunday, June 12th, 2016

இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுடன் மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் சேவைக்கு அதிகமாக தன்னார்வபணியாளர்களை அழைத்துக் கொள்வதற்காக (A.V.S) என்ற திட்டத்தினை தொடர வெளிநாட்டு கூட்டு முயற்சியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை நடத்தி செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை மீன்படி கூட்டுத்தாபனமானது நட்டத்தில்இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நட்டத்தினால் அங்குள்ள பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க திறைசேரியின் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் நல்ல மீன்கள் பிடிக்கப்பட்டாலும் வருடாந்தம் 15 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களை இலங்கை இறக்குமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts: