இலங்கை மீனவர் 9 பேர் விடுவிப்பு!

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த 9 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 9 மீனவர்களும் சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்..
தேவேந்திரமுனை மற்றும் கந்தர கடல் பகுதியூடாக மீன்பிடிக்கு சென்றவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல்
வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு - பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு - உலக வங்கியின் பிரதிநிதி...
|
|