இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ் பல்கலைக்கழகம் விஜயம் – துணைவேந்தருடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, September 26th, 2023

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஜ் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்திருந்தார்..

இதன்போது இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற், கலாசார ஒத்துழைப்புக்கான துணைத் தூதுவர் ஒலிவியா பெலீமியர் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் ஊடகத் தொடர்பாடல் அதிகாரி டினுசா இல்லப்பெருமா ஆகியோர் அடங்கிய குழுவினரே இன்று காலை விஜயம் செய்திருந்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சமகால விடயங்கள் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தினூடாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்றல் மற்றும் ஆராய்சி செயற்றிட்டங்களின் மீளாய்வு குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது

000

Related posts:

எரிபொருள் - சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ஏழுமாதங்களாகும் - அமைச்சர் காமினி லொக்குக...
மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்கிறது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனா...