இலங்கை சுற்றுலாத்துறைக்கு  அதிக வருமானம் !

Tuesday, March 6th, 2018

2017 ஆம் ஆண்டு முதல் 5 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் வருமானம் ஆயிரத்து 521.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் இது 4.8 வீத அதிகரிப்பாக காணப்படுகின்றது இந்தத் தகவலை இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளிப்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை,2016 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் ஆயிரத்து 451.8 மில்லியன் அமெர்க்க டொலர் தொகை மதிப்பீடுடைய வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம்ட வரையான பாலப்பகுதியில் சுற்றுலாப் பயனிகளின் வருகை 4.8 வீதமாக அதிகரித்திருந்தது சுற்றுலாப்பயணிகளின் வருகை 8இலட்சத்து 87 ஆயிரத்து 93ஆக காணப்பட்டது

இந்தக் காலப்பகுதியில் இந்தியா சீனா பிரிட்டன் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து நாட்டினுள் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் வினிதாசாரம் 51.4 ஆகக் காணப்படுகின்றது.

கடந்த மே மாத காலப்பகுதியில் சுற்றலாப்பயனிகளின் வருகை 2.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 891 சுற்றுலாப்பயணிகள் நாட்டினுள் வருகை தந்துள்ளனர் 209.1மில்லியன் அமெரிக்க டொலர் தொகை மதிப்பீடுடைய வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றுள்ளது.

Related posts: