இலங்கை – கொரியா பாதுகாப்பு உயரதிகாரிகள் சந்திப்பு!

Friday, April 1st, 2016

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கொரியா பாதுகாப்பு அமைச்சர் சாங் மியோங் ஜின்னைச் சந்தித்துள்ளார்.

இந்தியாவின் கோவா பிராந்தியத்தில் நடைபெற்ற டிபெக்ஸ்போ – 2016 ஆம் ஆண்டிற்கான நிகழ்வு நேற்று(31) நடைபெற்றது.    இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கொரியா பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நீண்ட கால உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இக்கலந்துரையாடலின் போது கடற்படை மற்றும் கடல்சார் விவகாரங்களை வலுப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப மற்றும் இதர அவசியமிக்க விடயங்களில் உதவிகளை வழங்க கொரிய அரச அதிகாரிகள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.இதனடிப்படையில் இலங்கையின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட இரு நாடுகளும் தமது இணக்கத்தினையும் வெளிப்படுத்தினர்.

அத்துடன் கொரிய அரசு தமது நாட்டு படையினருக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்களை வழங்கியமைக்கு தனது நன்றியை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததுடன் கொரிய பாதுகாப்பு அமைச்சரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: