ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை!

Monday, July 4th, 2016

இலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, முப்படையினர் தவறு செய்திருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக வைத்து உள்நாட்டு சட்டங்களுக்கமையவே விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஷெய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பயங்கரமானதாகும்.

சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தோடு இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் “சர்வதேச சட்டங்கள்” உள்ளீர்க்கப்பட வேண்டுமென்றும் இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்திலான சரத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: