இலங்கை கடற்படை கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில்!

Tuesday, October 25th, 2016

பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு நேற்றைய தினம் சென்றடைந்தன.

இந்தியா கடற்படையினரால் குறித்த கப்பல்கள் இரண்டும் வரவேற்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்களின் தலைவர்களான பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான ஆகியோர் சென்றுள்ளதுடன் இந்திய தெற்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னியை கொச்சி தலைமையகத்தில் சந்தித்துள்ளனர்.

மேலும் குறித்த கப்பல்கள் இரண்டும் பயிற்சிகளை முடித்துக் கொண்டு இந்த மாதம் 27ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1453711304568india_sl_ship_navy_003

Related posts: