இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கரைதிரும்பிய 3000 இந்திய மீனவர்கள்!
Wednesday, September 14th, 2016
கச்சத்தீவுக்கு அருகில் வைத்து இலங்கைப்படையினரின் அச்சுறுத்தலால் சுமார் 3000 தமிழக மீனவர்கள், தொழில் செய்யாமல் கரைத்திரும்பியுள்ளதாகவும் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சத்தீவுக்கு அருகில் சுமார் 536 படகுகளில் தாம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதும் தம்மை சுற்றிவளைத்த சுமார் 50 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளை நாசப்படுத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து கரைக்கு திரும்பி செல்லுமாறு இலங்கை கடற்படையினர் தம்மை அச்சுறுத்தியதாக தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து அனைத்து படகுகளும் இன்று காலை தொழிலில் ஈடுபடாமல் கரைக்கு திரும்பிவிட்டதாக ராமேஷ்வர மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:
இலங்கை இனப் பிரச்சனை தீர்வு தொடர்பில் பிரதமர் ரணில் யோசனை!
சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ரஷ்யா விலகுமா?
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த திட்டம் - கல்வி அமைச்சர்!
|
|
|


