இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டும் நபரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ஆட்களை அனுப்புபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்துள்ளது
அமெரிக்காவின் இந்த அறிவித்தலுக்குள் வந்த முதலாவது இந்திய தீவிரவாத அமைப்பின் தலைவராக மொஹமட் ஸாபி ஆர்மார் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது
அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக குறித்த மூன்று நாடுகளில் இருந்தும் ஆட்களை திரட்டும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்
சர்வதேச காவல்துறையினரின் பிடியாணைக்கு உள்ளாகியுள்ள அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராவார்
சொட் மௌலா, அஞ்சன் பாய் மற்றும் யூசுப் அல் ஹிந்தி ஆகிய பெயர்களில் அவர் அழைக்கப்படும் அவர், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மீண்டும் இலங்கையில் தன்னார்வு நிறுவனங்கள்!
நயினாதீவில் கஞ்சா மீட்பு!
ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவலை நிராகரித்தது அரசாங்கம்!
|
|