இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டும் : சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்த யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள்

Wednesday, April 27th, 2016

இலங்கையில் சுவீடன் தூதரகம் நிறுவப் பட வேண்டுமென யாழ். மாவட்டச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

இலங்கைக்கான சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் அடங்கிய ஏழுபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் ஒருகட்டமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று (26-) யாழ்.மாவட்டச்  செயலகத்தில்  இடம்பெற்றது .

இந்தச் சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் நிலவுகின்ற நீர்ப் பிரச்சினைகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் என்பன தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.அத்துடன் சிவில் அமைப்புக்களின் ஊடாக எதிர்காலத்தில் கொண்டு வரவுள்ள  மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்களைத் தான் பெறுமதி மிக்கதாகக் கவனத்திலெடுத்து தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.

7f1893e5-c0ee-4908-867a-1013a9ef3764

Related posts:

யாழ். கொக்குவில் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில்  புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவச பயிற்சிப்  பரீட்சைய...
செவ்வாய்முதல் மாகாணங்களுக்கு இடையே பேருந்து சேவை - இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்...
மின்சார சபைக்கு புதிய ஆண்டு புதிய ஆட்சேர்ப்பு இல்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!