இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றுள்ள பூஜித ஜயசுந்தர நல்லூரில் விசேட பூஜை வழிபாடுகளிலும் சமய ஆராதனைகளிலும் பங்கேற்பு

இலங்கை மனித உரிமை அமைப்பின் – யாழ்ப்பாணக் கிளையின் எற்பாட்டில் இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர நேற்று சனிக்கிழமை (30-04-2016) காலை யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்றதுடன் சமய ஆராதனைகளிலும் பங்கேற்றார்.
இலங்கை மனித உரிமை அமைப்பின் யாழ். நிர்வாக பணிப்பாளரும் பேராசிரியருமான ஆர்.சாந்தன் தலைமையில் இந்த விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
குறித்த வழிபாட்டு நிகழ்வுகளில் யாழ் . மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.கே. பெரேரா மற்றும் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டீ.வீரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றுள்ள பூஜித ஜயசுந்தர இலங்கைப் பொலிஸ் திணைக் களத்தின் ஒழுக்கத்தையும் , மரியாதையையும் பாதுகாத்து நேர்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இலங்கை மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காலை-6 மணி முதல் பிற்பகல் -6 மணி வரை இலங்கை பூராகவும் சர்வமதப் பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|