இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 7 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Saturday, April 27th, 2024
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (26) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனைக் தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.
இதேநேரம் மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
எதிர்வரும் 18 ஆம் திகதி பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை !
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்...
|
|
|


