இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா அறிவிப்பு!

Thursday, June 20th, 2024

இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் உதவுகின்றது.  அதேபோன்று இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு ஆதரவளிப்பதற்கான விடயத்துடன் தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: