இலங்கைக்கு வந்துள்ள சீனாவின் ஆய்வுக் கப்பல்!
Friday, February 3rd, 2017
சீன கடற்படையின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ‘க்யோன் சன்ஹின்ங்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தடைந்துள்ளது.’க்யோன் சன்ஹின்ங்’ கப்பல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் என கூறப்படுகின்றது.
எரிபொருள் தேவை மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்காக நேற்று இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.
இதேவேளை கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் கமாண்டர் யங் ஹெய்டொ மேற்கு கடற்படைக் கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகலவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சலுகை விலையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசனை!
நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!
கொலன்னாவ எரிபொருள் தாங்கிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!
|
|
|


