இலங்கைக்கு  எச்சரிக்கை!

Wednesday, March 21st, 2018

உலகில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்பை எதிர் கொள்ளவுள்ள 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் உலக சந்தையில் முன்னணியில் உள்ள 67 நாடுகளை தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த 67 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94சதவீதத்தைக் கொண்டுள்ளன.

உலக வங்கியால் மேற்கொண்ட இந்த ஆய்விற்கு அமைய இந்தியா காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடாக உள்ளது.அடுத்தகட்ட அபாயத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

பொதுவாக  இந்த நாடுகளில்  பூமியின் வெப்பம் அதிகரிப்பு, மழை குறைவதுடன் காற்றின் வேகம், வெள்ளப்பெருக்கு ஆகிய சீரற்ற காலநிலைகாணப்படக்கூடும் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: