இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன் வழங்கவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி தெரிவிப்பு!
Thursday, December 30th, 2021
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இந்தியா தற்போது ராஜபக்ச அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒத்திவைக்கப்பட்ட வட்டி கடனாக வழங்கவேண்டும்,
அல்லது சீனாவிற்கு இளைய சகா ஒருவர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்ளவேண்டும்.
மோடி அரசாங்கம் பல வெளிவிவகார கொள்கைகளில் தோல்வியடைந்துள்ளது இலங்கை இன்னொன்றாக இருக்கவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தமிழ் தெரிந்த பதில் பணிப்பாளரை நியமியுங்கள் பொது மக்கள் கோரிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகளினது விடுமுறைகள் இரத்து!
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது!
|
|
|


