இறுதி அறிக்கை இன்று கையளிப்பு!

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதியறிக்கை இன்று (03) ஜனாதிபதியிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கப்படவுள்ளது.
நல்லிணக்க பொறிமுறையின் பொருட்டு பதிலளிக்கும் செயலணியினால் கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட மக்கள் கருத்துக்களை உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நல்லிணக்க பொறிமுறை எந்த முறையில் நடைபெற வேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை பெறுவதற்காக குறித்த செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில ஸ்தாபிக்கப்பட்டது.
சட்டத்தரணி மனுரி முத்துஹெட்டிகமவின் தலைமையிலும், செயலாளரான பேராசிரியர் பாக்கியஜோதி சரவணமுத்துவின் பங்களிப்புடனும் 11 பேர் கொண்ட செயலணி இந்த பணியில் ஈடுபட்டது.
Related posts:
மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!
எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ...
மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு - வடமராட்சியில் சம்பவம்!
|
|