இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானம்!
Friday, April 22nd, 2016
ஏற்றுமதி செய்யப்படும் இறப்பர் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியைக் குறைப்பதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் இறப்பருக்கான செஸ் வரி 15 ரூபாவாகக் காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார்.
இந்த செஸ் வரியை 5 வீதத்தால் குறைப்பதற்கு நிதி அமைச்சிடம் பிரேரணை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இறப்பர் விலை வீழ்ச்சியடைகின்ற போதிலும் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார்.உலக சந்தையில் காணப்படும் கேள்வியின் அடிப்படையில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தபால் சேவையும் இடைநிறுத்தம்!
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை - எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களால் அரசை ஒருபோதும் கவி...
காணி விடுவிப்பு தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது - அமைச்சர் பவித்திரா சுட்டிக்...
|
|
|


