இறக்குமதி வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!
Thursday, June 30th, 2016
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கவுள்ளன. அந்நாட்டு நாணயத்தின் உயர்வு காரணமாகவே இந்த நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார். ஜப்பானிய யென்னின் பெறுமதி ரூபாவுக்கு எதிராக 1.45 ஆல் உயர்ந்துள்ளது.
எனவே இறக்குமதி வாகனங்களின் விலைகள் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை அதிகரிக்கலாம்என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மோட்டார் கார், ஜீப் மற்றும் வேன்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க விமானிகள் தீர்மானம்!
சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
பரீட்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானம் - கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு!
|
|
|


