இருவர் இடைநீக்கம்

Wednesday, June 1st, 2016

அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் சேவையாற்றுகின்ற அனுஷ பெல்பிட மற்றும் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க ஆகிய இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரையும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு, அரச சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  இன்று செவ்வாய்க்கிழமை மாலை கூடிய விசேட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

அரச சேவைகள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம், அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: