இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா வளர்ப்பு!
Friday, August 12th, 2016
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்குகருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஆயுர்வேத மருந்துப் பொருட்களை தயாரிப்பதற்காக இவ்வாறு கஞ்சா போதைப் பொருள் வளர்க்கப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக மத்துகம பிரதேசத்தில் அறுபது ஏக்கர் காணியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட உள்ளன. இதுவரை காலமும் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளே ஆயுர்வேத மருந்துப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டு, பிடிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் கிடைக்கும் இந்த கஞ்சா தாவரத்தின் மருத்துவ குணங்கள் குறைந்து விடுகின்றன. எனவே நேரடியாக கஞ்சா செடிகளை மருந்துப் பொருள் உற்பத்திகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா வளர்க்கப்பட்டு அவை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட உள்ளது என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


