இரத்த வங்கிகளில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்!

இராணுவ வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இரத்த வங்கியில், இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் புதிய தொழிநுட்பமான ஜெல் அட்டை தொழிநுட்பத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் இவ்வகைப் உயரிய முதற்தர புதிய தொழில்நுட்பத்தை இம்மாதம் 1ம் திகதி முதல் இலங்கை இராணுவ வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
புதிய ஜெல் அட்டை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளார்கள் தொடர்பான துல்லியமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் தேவையின் பொருட்டு அவற்றை பல வாரங்களுக்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடிவதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய தொழிநுட்பம், பரிசோதனைக்காக நோயாளார்களிடமிருந்து மிக குறைவான இரத்த மாதிரிகளின் மூலம் செயற்படுத்த கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சில விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு!
கோண்டாவில் விபத்தில் இளம் பெண் படுகாயம்!
பணியில் இருந்து நீக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பாதுகாப்பு அமைச்சர் அதிரடி நடவடிக்கை!
|
|