இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை !

இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு நீர்பாசண திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சுற்றுவட்டம் அமைந்திருந்த பகுதியில் குறித்த நினைவு கல்லையும்,புதிய நினைவு கல்லையும் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியினால் குறித்த குளம் விவசாயிகளிடம் கையளிக்க மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த நினைவு கல்லை அப்பகுதியில் பொருத்த முடியாது போனதாகவும், தற்போது குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கிக்கின்றது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த கல் அகற்றப்பட்டு புதிய கல் திரைநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கும் நீர்பாசன திணைக்களம், ஓரிரு நாட்களில் பழமைவாய்ந்த நினைவு கல்லும் மக்கள் பார்வைக்காக பொருத்தப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றர். குறித்த நினைவு கல் சுமார் 8 இஞ்சி அகலம் கொண்டதுடன், பாரிய கருங்கல் ஒன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
Related posts:
|
|