இரசாயன மருந்து விற்பனையாளர்கள் பதிவு செய்யவும்!

Friday, April 27th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பீடை நாசினிகள் இரசாயன மருந்து விற்பனையாளர்கள் யாவரும் விவசாய திணைக்களத்தில் தமது பதிவுகளை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட விவசாய திணைக்களத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட பிரிவு விவசாயப் போதனாசிரியர்களிடமோ இதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts: