இம்முறை யாழ்.மாவட்டத்தில் 2000 ஹெக்ரெயரில் வெங்காயச் செய்கை!
Monday, October 10th, 2016
யாழ். மாவட்டத்தில் இம்முறை 2ஆயிரத்து 100 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் காலபோக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தச் செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்துள்ளார்.
கடந்த சிறுபோகத்தில் 2ஆயிரத்து 150 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார். சிறுபோகத்தின் போது பயிரிட்ட வெங்காயச் செய்கை மூலம் விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெற்றனர். அறுவடைச் செய்யப்பட்ட வெங்காயம் கூடுதலாகச் சந்தைக்கு வந்து சேர்ந்தால் அவற்றின் விலையும் குறைந்தே காணப்பட்டது.

Related posts:
மாதாந்தம் 75000 ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் செயற்றிட்டம்!
வெங்காய உற்பத்தித் துறையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி!
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!
|
|
|


