இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்!

Thursday, December 1st, 2016

உலகளாவிய ரீதியில் இன்று உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் உருவானது.அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்கள் மத்தியில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை 2016 ஆம் ஆண்டிற்கான எயிட்ஸ் மாநாடு தென்கொரியாவின் டேர்பன் நகரில் முன்னெடுக்கப்படுகின்றது.

எயிட்ஸ் தொடர்பிலான விழிப்புணர்வை சமூகங்களிடையே ஏற்படுத்துவது உள்ளடங்கலாக 6 எண்ணக்கருக்களுடன் இம்முறை எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

world-aids-day

Related posts: