இன்றும் ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Friday, October 7th, 2016

ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் சில பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியை மறித்து செனன் சந்தியில் சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று முற்பகல் சம்பள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது அரசியல்வாதிகள் தங்களுக்கு 1000 ரூபாவை வேதனமாக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தும் வகையிலான கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பியதுடன், ஒப்பாரியும் வைத்தனர்.தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாத்தளை, பலக்கடுவ, பன்சலதென்ன தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிலை முன்னெடுக்கும் தமக்கு 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.இந்த போராட்டம் காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் பலக்கடுவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 DSC09216

Related posts: